மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய விழா - கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு


மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய விழா - கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு
x

தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற உலக பாரம்பரிய விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

செங்கல்பட்டு,

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு தொல்லியல் துறை மாமல்லபுரத்தில் பாரம்பரியத்தை பரைசாற்றும் ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் கண்காட்சி நடைபெற்றது.

இந்த பாரம்பரிய விழாவின் நிறைவு நாளான நேற்று, மாமல்லபுரத்தில் கோலாட்டம், தப்பாட்டம், கிராமிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளின் போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.


Next Story