தடுப்பணையில் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி


தடுப்பணையில் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி
x

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி- பத்தா பேட்டை பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது 45), தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பாலாறு தடுப்பணை அருகே கனகநாச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சம்பவ நாளன்று கனகநாச்சியம்மன் ஆலயம் அருகே குளிக்க சென்ற ரங்கன் புல்லூர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோல் தொழிற்சாலை தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது,

தடுப்பணை மீது போதிய பாதுகாப்புகள் ஏற்படுத்தாததும், தடுப்பு வேலிகள் அமைக்கப்படாததும், இத்தகைய உயிர் பலிக்கு காரணமாக உள்ளது என கூறினர். கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் ஆந்திர மாநில அறநிலையத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர்,காவல் துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story