சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலி
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
ராணிப்பேட்டை
தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 61). கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டபோது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் லோகநாதன் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story