புத்தளம் அருகேஸ்கூட்டர் விபத்தில் தொழிலாளி சாவு; நண்பர் படுகாயம்


புத்தளம் அருகேஸ்கூட்டர் விபத்தில் தொழிலாளி சாவு; நண்பர் படுகாயம்
x

புத்தளம் அருகேஸ்கூட்டர் விபத்தில் தொழிலாளி இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர் ஜான் கிஷோர் (வயது 22), தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தன்னுடைய நண்பர் முகேஷ் என்பவருடன் ஸ்கூட்டரில் கன்னியாகுமரி நோக்கி சென்றார். இந்த ஸ்கூட்டரை முகேஷ் ஓட்டினார்.

புத்தளம் அருகே கீழபுத்தளம் பகுதியில் சென்ற போது திடீரென ஸ்கூட்டர் முகேஷ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர முள்வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜான்கிஷோர், முகேஷ் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் ஜான் கிஷோர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். முகேசுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story