கிணற்றில் தொழிலாளி பிணம்


கிணற்றில் தொழிலாளி பிணம்
x

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 37). இவர் மும்பையில் தங்கி கூலி வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டில் உள்ளவர்களிடம் திருப்பாலபந்தல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளை பார்த்துவிட்டு வரப்போவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களி்ல் தேடி அலைந்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பாலபந்தல் கிராமத்தில் உள்ள முருகன் என்பவருடைய நிலத்தில் இருந்த கிணற்றில் சிவலிங்கம் பிணமாக பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து சென்று சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story