மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது


மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
x

நாகூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறு

நாகை மாவட்டம் நாகூர் அருகே கடம்பங்குடி கிராமம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல்(வயது 53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலெட்சுமி(48). இவர்களுக்கு ஹேமலதா(26), பவித்ரா(24), ஐஸ்வர்யா(23), பிரகதீ(22) ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

சிங்காரவேலுக்கும், மனைவி முத்துலெட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு சிங்காரவேல் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்ததுடன், உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அதை பார்த்த மகள் ஹேமலதா தந்தையை தடுத்துள்ளார்.

அப்போது மகளை கீழே தள்ளி விட்டு மனைவி முத்துலெட்சுமியை சிங்காரவேல் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முத்துலெட்சுமி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூரில் பதுங்கியிருந்த சிங்காரவேலை கைது செய்தனர். இவர் மீது நாகூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

---


Next Story