பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

பெண்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தின் கீழ் ஆடு வளர்க்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் பெண்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தின் கீழ் ஆடு வளர்க்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வகித்தார்.

இதில் கால்நடை மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது,

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றார். அவருடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆடு வளர்க்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதனை பெண்கள் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும்.

ஐந்து ஆடுகள் இரண்டு ஆண்டுகளில் நன்கு பராமரிக்கும் போது 25 முதல் 28 ஆடுகள் வரை ஒரு பயனாளிக்கு கிடைக்கும். இதனை மேலும் பராமரித்து ஆட்டுப்பண்ணையாக பண்ணையின் முதலாளியாக பெண்கள் மாற வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.


Next Story