பொங்கல் பானையுடன் பெண்கள் தர்ணா


பொங்கல் பானையுடன் பெண்கள் தர்ணா
x

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பொங்கல் பானையுடன் பெண்கள் தர்ணா

மதுரை

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இந்த ஊரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் இங்கு ஒரு தரப்பினர் நேற்று காலையில் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்ய வந்தனர். அப்போது,மற்றொரு தரப்பினருக்கும் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினையை பேசி தீர்க்கும் வரை அவர்களுக்கு பூஜையில் ஏதும் செய்யக்கூடாது என்று பூசாரிக்கு கோவில் நிர்வாக கமிட்டியினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் கருவறை முன்பு பொங்கல் பானையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உங்களுக்குள் சமரசம் ஏற்படும் வரையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பூசாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மக்கள், வருவாய் துறை அதிகாரிகளை பூஜை செய்ய சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை சேர்ந்தவர்கள் பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு விபூதி வழங்கினர்.

இந்தநிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், தன் குடும்பத்துடன் வந்து இக்கோவிலுக்கு பொங்கல் வைத்தார். பின்னர் கோவில் உள்ள நந்தி சிலை முன்பு தான் வைத்த பொங்கலை வைத்து தரிசனம் செய்தார். அதே போல் தான் பலர் சாமிக்கு தாங்கள் வைத்த பொங்கலை நந்தி முன்பு படையல் செய்துவிட்டு அம்மனை வணங்கி சென்றனர்.


Related Tags :
Next Story