கும்பாபிஷேக விழாவில் நகை திருட முயன்ற பெண் சிக்கினார்


கும்பாபிஷேக விழாவில் நகை  திருட முயன்ற பெண் சிக்கினார்
x

கும்பாபிஷேக விழாவில் நகை திருட முயன்ற பெண் சிக்கினார்

மதுரை

கொட்டாம்பட்டி,

மேலூர் அருகே உள்ள பெரிய சூரக்குண்டு கிராமத்தில் நாகம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்து தங்கச்சங்கிலியை திருட முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் கையும் களவுமாக அப்பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை சோதனை செய்தபோது கட்டிங் பிளேடுடன் நகை பறிப்பில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரை சேர்ந்த நாகம்மாள்(வயது 45) என்பதும் தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் கூடும் கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேக விழாக்களில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நாகம்மாளுடன் எத்தனை பேர் வந்தார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story