கரடு, முரடான சாலை சீரமைக்கப்படுமா?


கரடு, முரடான சாலை சீரமைக்கப்படுமா?
x

சேதுபாவாசத்திரம் அருகே கரடு,முரடான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே கரடு,முரடான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரடு,முரடான சாலை

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை ஊராட்சியில் உடைய நாட்டில் இருந்து மரக்காவலசை செல்லும் பங்களா சாலை என அழைக்கப்படும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் இருந்த ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிப்பதால், இந்த வழியாக நடந்து செல்லவே முடியாத வகையில் உள்ளது. நடந்து செல்லும் மக்களின் கால்களையும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களின் டயர்களையும் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள் பதம் பார்த்து விடுகின்றன.

வாகன விபத்துகள்

ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை பயன்படுத்தி தான் இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மரக்காவலசை நியாய விலை கடைக்கும், பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் சென்று வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். சாலை படுமோசமான நிலையில் உள்ளதால், இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

சீரமைக்க வேண்டும்

இந்த பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கரடு, முரடாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இல்லை என்றால் மக்களை திரட்டி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ெதரிவித்துள்ளனர்.


Next Story