குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?


குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள சாலை சுமார் 25 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

கீழே விழும் வாகன ஓட்டிகள்

மேலும், மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியமாலம் தடுமாறி கீழே விழுகின்றனர்.

சேதமடைந்துள்ள சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மேலும், இந்த சாலை வழியாக வடபாதிமங்கலம், கோட்டூர், விக்ரபாண்டியம், திருத்துறைப்பூண்டி, திருக்கொள்ளிக்காடு, மாவட்டக்குடி, திருவாரூர், மன்னார்குடி போன்ற ஊர்களுக்கு சென்று வருபவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை முழுமையாக சீரமைத்து தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story