விடுதியில் தங்கி இருந்த வடமாநில வியாபாரி திடீர் சாவு


விடுதியில் தங்கி இருந்த   வடமாநில வியாபாரி திடீர் சாவு
x

விடுதியில் தங்கி இருந்த வடமாநில வியாபாரி திடீர் சாவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அரியானா மாநிலம் பேரிடாபாத் பகுதியை சேர்ந்தவர் யாஸ்பால் (வயது 51). இவருடைய மகன் கவுசிக் (25). இவர்கள் இருவரும் அரியானா மாநிலத்தில் இருந்து உலர் திராட்சை மற்றும் நாட்டுமருந்துகளை வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராக சென்று விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை கவுசிக் வியாபாரத்துக்கு புறப்பட்டார். யாஸ்பால் இருதயநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததால், அவரால் உடன் ெசல்ல முடியவில்லை. விடுதியில் யாஸ்பால் மட்டும் தனியாக இருந்தார்.

அவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு யாஸ்பால் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து யாஸ்பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வடமாநில வியாபாரி திடீர் சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story