மலைப்பாதையில் பஸ் வந்தபோது டிரைவருக்கு திடீர் மயக்கம்


மலைப்பாதையில் பஸ் வந்தபோது டிரைவருக்கு திடீர் மயக்கம்
x

மலைப்பாதையில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதால் பஸ்சை அவர் சமயோஜிதமாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிறுத்தினார்.

திருப்பத்தூர்

மலைப்பாதையில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதால் பஸ்சை அவர் சமயோஜிதமாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிறுத்தினார்.

டிரைவருக்கு 'திடீர்' மயக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மடவாளம் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்பு (வயது 45) ஓட்டி வந்தார்.

மங்களம் கூட் ரோடு அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது. சமாளித்தவாறே ஒரு வழியாக ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததும் பஸ்சை நிறுத்தினார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவரை தண்ணீர் தெளித்து கண்டக்டர் எழுப்பி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

சிகிச்சை

டாக்டர் சுமிதா அவரை பரிசோதனை செய்ததில் ரத்த கொதிப்பு அதிகமாக இருந்தது. மேலும் சர்க்கரை வியாதி இருந்தது தெரியவந்தது. இதனால் தான் டிரைவருக்கு தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார் இதனையடுத்து சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க கூறினார்.

இது சம்பந்தமாக திருப்பத்தூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு அவர் தகவல் தெரிவித்தார். மாற்று டிரைவர் இல்லாததால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் நீங்களே பஸ்சை ஓட்டி வாருங்கள் என டிரைவர் அன்புவிடம் கூறிவிட்டனர்.

சற்று நேர ஓய்வுக்கு பின் பஸ்சை டிரைவர் அங்கிருந்து பயணிகளுடன் திருப்பத்தூருக்கு ஓட்டி வந்தார்.

நிம்மதி

தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர். எனினும் சற்று தொலைவு கழித்து ஆபத்தான கொண்டைஊசி வளைவு பகுதியில் வரும்போது மயக்கம் ஏற்பட்டிருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும். சமயோசிதமாக செயல்பட்டு பஸ்சை ஆரம்ப சுாதார நிலையம் முன்பு நிறுத்தியதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் தாமதம் ஆனாலும் டிரைவரின் சமயோசிதத்தை பாராட்டி நன்றி தெரிவித்து நிம்மதி அடைந்தனர்.


Next Story