மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோதுதோட்டத்தில் இறந்து கிடந்த பசுக்கள்
கடமலைக்குண்டு அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது தோட்டத்தில் 2 பசுக்கள் இறந்து கிடந்தன.
தேனி
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் திருவானைச்சாமி. இவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவர், வழக்கம் போல பசுக்களை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டு சென்றார். பின்னர் மாலை பசுமாடுகளை வீட்டிற்கு பிடித்து வருவதற்காக தோட்டத்திற்கு சென்றார். அப்போது அந்த தோட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பசுக்கள் இறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த திருவானைச்சாமி, மர்ம நபர்கள் யாரேனும் பசுமாடுகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடமலைக்குண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story