ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?


ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீரை தேடி தள்ளுவண்டியில் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீரை தேடி தள்ளுவண்டியில் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தீராத ஒரே பிரச்சினை என்றால் குடிநீர் தட்டுப்பாடு தான். மாவட்டத்தின் எல்லை பகுதியான கன்னிராஜபுரம் முதல் தொண்டி வரையிலான மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஊர்களில் குடிதண்ணீர் பிரச்சினை அதிகமாகவே உள்ளது.

மேலும் சாயல்குடி, சத்திரம், சிக்கல், முதுகுளத்தூர், இதம்பாடல், மேலசெல்வனூர், ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஊர்களில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

கோரிக்கை

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி, புது மாயாகுளம், புல்லந்தை உள்ளிட்ட பல ஊர்களிலும் மக்கள் குடிதண்ணீருக்காக தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் நடந்தபடி சென்று வருகின்றனர். அதிலும் பல பெண்கள் தள்ளுவண்டிகளில் குடங்களையும், குழந்தைகளையும் வைத்து குடிதண்ணீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு வீடுகள் தோறும் குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலோ இதுவரை குடிதண்ணீர் இணைப்பு வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் குடங்களுடன் குடிதண்ணீருக்காக அலைந்து கஷ்டப்படும் நிலை தான் இருந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தான். குடிதண்ணீர் கிடைத்தாலே மக்கள் அனைவரும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகள் தோறும் குடிதண்ணீர் இணைப்பு வழங்கி மக்களின் பல ஆண்டுகால கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.


Next Story