காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.4½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.4½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

காஞ்சிபுரம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 311 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற்று வரும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில், காஞ்சீபுரம் மாவட்டம் ஆண்களுக்கான பொது பிரிவு கிரிக்கெட் போட்டியில் 3-ம் இடம் பிடித்த வீரர்களும், சிலம்பம் விளையாட்டில் மான் கொம்பு பிரிவில் 3-ம் இடம் பிடித்த பாலகிருஷ்ணன் என்ற வீரரும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ரூ.4½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 58 ஆயித்து 400 மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பிட்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.இரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story