மதுரையில் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு:பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மதுரையில் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணித்து வந்த தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்று கூறினார்.

மதுரை


மதுரையில் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணித்து வந்த தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிைச சவுந்தரராஜன், பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்று கூறினார்.

வந்தே பாரத்துக்கு வரவேற்பு

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை நேற்று நெல்லையில் நடந்த விழாவில், காணொலி காட்சி மூலம் பிரதமர் ேமாடி தொடங்கி வைத்தார்.அந்த ரெயிலில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பயணம் செய்து வந்தனர். வந்தே பாரத் ரெயில் நேற்று பிற்பகல் 2.55 மணி அளவில் மதுரை ரெயில் நிலையம் வந்தது. பா.ஜனதா சார்பில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கேக் வெட்டப்பட்டது

இதனை தொடர்ந்து, வந்தே பாரத் ரெயில் போன்று அமைக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. அப்போது, தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இதனை தொடர்ந்து மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடந்த விழாவில், அங்கிருந்து புறப்பட்ட ரெயிலை தெலுங்கானா முதல் குடிமகளாக இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் சாதாரண குடிமகளாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக ெநல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலின் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன்.

புறக்கணிக்கவில்லை

வந்தே பாரத் ரெயிலில் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள், தென்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என கூறி வந்தார்கள். ஆனால், தற்போது அதனை பொய்யாக்கும் விதமாக தென் பகுதிக்கு வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. பிரதமர் தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார். தமிழகத்தின் வேகமான வளர்ச்சி, வேகமான ரெயில் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. எந்த ரெயில் நிறுத்தத்தையும் புறக்கணிக்கவில்லை. வேகமான ரெயில் என்பதால், அதற்கு ஏற்றாற்போல் நிறுத்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை ரெயில்வே மந்திரிக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story