ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகாசியில் வரவேற்பு


ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகாசியில் வரவேற்பு
x

ஆக்கி போட்டி கோப்பைக்கு சிவகாசியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

ஆசியா அளவில் ஆண்களுக்கான ஆக்கி போட்டி சென்னையில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து ெகாள்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பார்வைக்கு எடுத்துசெல்லப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து இந்த கோப்பை சிறப்பு வாகனம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோப்பை நேற்று காலை சிவகாசிக்கு வந்தது. அரசன் மாடல் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் தலைமையில் கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணி மாறன், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், ராஜகுரு, சிவகாசி மாநகர செயலாளர் உதய சூரியன், கவுன்சிலர் வெயில்ராஜ், விருதுநகர் மாவட்ட ஆக்கி கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆக்கி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முடிவில் நிகழ்ச்சியின் நினைவாக முக்கிய பிரமுகர்கள் அரசன் மாடல் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.. 2 மணி நேர பொதுமக்கள் பார்வைக்கு பின்னர் இந்த கோப்பை ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு செய்திருந்தது.


Next Story