"முகக்கவசம் அணிந்தாலே கொரோனாவை தடுக்கலாம்" - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


முகக்கவசம் அணிந்தாலே கொரோனாவை தடுக்கலாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே கொரோனாவை தடுக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்தமாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100-க்கு கீழ் இருந்த தொற்று பரவல் தற்போது 500-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,62,297 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா பரவலை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.


Next Story