கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x

கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் மூலம் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் பாசனத்திற்காக மாயனூர் காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து முன்கூட்டியே புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீரை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம் ஆகியோர் திறந்து விட்டனர். தண்ணீரினை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு மகசூல் பெற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஸ்ரீதர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவர் சுமத்ராதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுப்பணி துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story