பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும்


பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்குவதற்குள் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

சீமைக்கருவேல மரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலும் ஏரிகள் உள்ளன. மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் குளம், குட்டைகளும் உள்ளன. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஏரிகளிலும், குளம், குட்டைகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதுடன், தூர்வாரப்பட்டு வருகிறது. வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் உள்ளன.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்நிலைகள் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. நீர் நிலைகளில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. வரத்து வாய்க்கால்களும், பாசன வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் தற்போது அவ்வவ்போது பெய்து வரும் மழையின் போது நீர் நிலைகளுக்கு மழைநீர் வருவது தடைப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தற்போது சில ஏரிகள், குளம், குட்டைகளில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தூர்வாரி வருவதை காணமுடிகிறது.

அதுபோல் தூர்வாரப்படாத ஏரி, குளம், குட்டைகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும், பழுதடைந்த மதகுகள் உள்ளிட்டவைகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர் நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story