வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டம் தொடக்கம்


வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக தண்ணீர் தினத்தையொட்டி செட்டிகுளம் பஞ்சாயத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உலக தண்ணீர் தினத்தையொட்டி உடன்குடி யூனியன் செட்டியாபத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொட்டங்காடு, சிவலூர், செல்வபுரம், தேரியூர் ஆகிய பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 270 வீடுகளுக்கு ரூ.15.20 லட்சத்தில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கிராம சபை கூட்டம் தேரியூரில் நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story