கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை


கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை
x

வரத்து கால்வாய்களை சரிசெய்து கண்மாய்க்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

வரத்து கால்வாய்களை சரிசெய்து கண்மாய்க்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வு

சாயல்குடி பெரிய கண்மாய் பகுதிகளை சாயல்குடி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவரும் சாயல்குடி விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜாராம் தலைமையில் செயலாளர் சம்சு, பொருளாளர் நாகராஜ் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் முகம்மது இதிரிஸ், குருசாமி, கண்ணப்பன், முனியசாமி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- சாயல்குடி கண்மாயில் உள்ள காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. அவைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயல்குடி பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் வரும் சங்கரதேவன் கால்வாய், நாராயண காவிரி ஆகிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அதனை அகற்றி கால்வாயை தூர்வாரி சாயல்குடி பெரிய கண்மாய்க்கு தண்ணீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழுவிளைச்சல்

கமுதி அருகே உள்ள பறையங்குளம் கால்வாய் அருகே மடையை உயர்த்தி கட்டினால் சாயல்குடி கண்மாய்க்கு தண்ணீர் அந்த பகுதியில் இருந்து வந்து சேரும். கடந்த ஆண்டு வைகை தண்ணீர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியால் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதுகுளத்தூர் பகுதியில் கொண்டுவரப்பட்டு அந்த பகுதியில் விவசாயம் முழு விளைச்சல் அடைந்தது. கால்வாயை சீரமைத்தால் வைகையில் இருந்து வரும் தண்ணீர் சாயல்குடி பெரிய கண்மாய்க்கு வரும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள நஞ்சை புஞ்சை நிலங்களில் இருபோக விவசாயம் செய்து தகுந்த மகசூலை விவசாயிகள் எடுப்பர்.

கோரிக்கை

விவசாயிகளுக்கு கால்வாய் மூலம்தண்ணீரைக் கொண்டு வந்தால் அவர்களின வாழ்வாதாரம் உயரும். எனவே மழைக்காலம் வருவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சாயல்குடி பெரிய கண்மாயை சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story