தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கைகடை உரிமையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கைகடை உரிமையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 July 2023 7:30 PM GMT (Updated: 3 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேட்டால் என்ற எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இந்த மருந்தை விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை துறையை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்காணிப்பு பணியின் போது இந்த மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்தை தர்மபுரி மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அது குறித்து பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story