கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு - சுகாதாரத்துறை முடிவு


கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு - சுகாதாரத்துறை முடிவு
x

கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 332க உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸிலிருந்து உருமாற்றமடைந்த பிஏ4 மற்றும் பிஏ5 என்ற புதிய வகை வைரஸ் பரவுவதே காரணம் என சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா அதிகரிக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளில் பரவாமல் இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும் என்றார். கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story