5 லட்சம் ருத்ராட்சத்தால் விஸ்வநாதருக்கு அலங்காரம்


5 லட்சம் ருத்ராட்சத்தால் விஸ்வநாதருக்கு அலங்காரம்
x

5 லட்சம் ருத்ராட்சத்தால் விஸ்வநாதருக்கு அலங்காரம்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் அதி விமர்சையாக கொண்டாடப்படும் மாசி மக விழா நேற்று காலை ருத்ர ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேதாந்தநாயகி விஸ்வநாதருக்கு மஞ்சள், திரவியம், பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்பட பொருட்களால் அபிஷேம் நடைபெற்றது. ருத்ர ஹோமத்தில் கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடஅபிஷேகம் நடந்தது. ஹோமத்தில் வைக்கப்பட்ட 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் விஸ்வநாதருக்கு 5 லட்சம் ருத்ராட்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வேதாந்த நாயகி வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் விஸ்வநாத குருக்கள் மற்றும் சதீஷ், பிரகாஷ் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story