வினேஷ் அனைத்து வகையிலும் நீங்கள் உண்மையான சாம்பியன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வினேஷ் அனைத்து வகையிலும் நீங்கள் உண்மையான சாம்பியன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பதக்கத்தைத் தவறவிட்டாலும் வினேஷ் போகத் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வினேஷ் போகத் பதக்கத்தைத் தவறவிட்டாலும், அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வினேஷ், நீங்கள் 'அனைத்து வகையிலும்' உண்மையான சாம்பியன். உங்கள் மீளும் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டியை நோக்கிய குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் எடையால் தகுதியிழந்தது, உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைத்து விடாது. நீங்கள் பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story