விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் தமிழக அரசின் புதிய சொத்து வரி உயர்வை அமல் படுத்துவது, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் கனகா, சுரேஷ், ரமேஷ், ரேவதி, புஷ்பராஜ், ஆனந்தி, சுதா, பவானி, சுபா, வெண்ணிலா, கணினி உதவியாளர் கீதா, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story