திமுகவுக்கு எதிராக இருந்தால்தான் விஜய் கட்சிக்கு எதிர்காலம் - மாபா பாண்டியராஜன்


திமுகவுக்கு எதிராக இருந்தால்தான் விஜய் கட்சிக்கு எதிர்காலம் - மாபா பாண்டியராஜன்
x

விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

சாத்தூர்,

சாத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசியதாவது:-

திமுக.வில் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் எங்கள் அண்ணா.... அவருக்கு பின்பு இன்பநிதி தான் எங்கள் அண்ணா.... என துரைமுருகன் பேசுவது ஏற்புடையதல்ல. மத்திய பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த பிறகு, தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் கால்நடை பூங்கா உருவாக்கினார். ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா சென்று சைக்கிள்தான் ஓட்டினார்.

புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என்பதை நாங்கள் நம்பவில்லை. விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுவதால்தான் அவருடைய மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் செய்தால்தான் நடிகர் விஜய் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். தோழமை கட்சிகளுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story