இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்


இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்
x

இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன், தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, பல்வேறு மொழி திரைப்படங்களை நடித்தும், இயக்கியும் உள்ளார். அவர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story