ஒலி ஒளி காட்சிக்கூடம் சோதனை ஓட்டம் வெற்றி


ஒலி ஒளி காட்சிக்கூடம் சோதனை ஓட்டம் வெற்றி
x

ஒலி ஒளி காட்சிக்கூடம் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன், குந்துகால் கடற்கரையில் விவேகானந்தர் மணி மண்டப கட்டிடம் ஒன்றுஅமைந்துள்ளது. தமிழக அரசும் ராமகிருஷ்ண மடமும் இணைந்து கட்டிய இந்த விவேகா னந்தர் மணி மண்டபத்தை ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து பராமரித்து வருகிறது.

மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தில் ரூ. 5 கோடி நிதியில் 3டி தொழில்நுட்பத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ராமாயண கதை அடங்கிய ஒலி-ஒளி காட்சிக்கூடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பாம்பனில் உள்ள விவேகானந்தர் மணி மண்டப கட்டிடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒலிஒளி காட்சிக்கூடம் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணி மண்டபத்தில் மத்திய அரசு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ஒலிஒளி காட்சி கூடத்தை சோதனை ஓட்டமாக நேற்று ஒளிபரப்பு செய்து காண்பிக்கப் பட்டது. அப்போது பலவித வண்ணங்கள் மணிமண்டப கட்டிடத்தின் மீது பிரதிபலித்தது. இது பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தது. பாம்பன் குந்து கால் விவேகானந்தர் மணி மண்டப கட்டிடத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த ஒலி ஒளி காட்சிக்கூடம் பெரியவர் நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும் சிறியவர் ரூ. 50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தினமும் இரவு 7 மணியில் இருந்து இந்த ஒளி, ஒலி காட்சிக்கூடம் ஒளிபரப்பப்படும் என்றும் 20 நிமிடம் மட்டுமே இது பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு ஓட்டல் பொறுப்பாளர்கள் மற்றும் சுற்றுலா அதிகாரிகளும் தெரிவித்தனர்.


Next Story