வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்


வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:46 PM GMT)

மாதம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாதம்பட்டு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி குபேர பூஜை, தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசம் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குக்குள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாதம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலநதுகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


Next Story