பெரியாண்டவர் கோவிலில் வராகி பெரும் பூஜை விழா


பெரியாண்டவர் கோவிலில் வராகி பெரும் பூஜை விழா
x

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் நடந்த வராகி பெரும் பூஜை விழாவில் பன்றிகள், ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வராகி பெரும் பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான வராகி பெரும்பூஜை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை அய்யனார் சாமிக்கு எதிர்நோக்கி பொங்கல் பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் 20-ந் தேதி இரவு வீரன் சாமிக்கு கொலு வைத்தலும், காப்பு கட்டுதலும் நடந்தது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு வீரன் சாமிக்கு வராகி பூஜை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்பேரில் பன்றிகள், ஆடுகள், கோழிகளை வீரன் சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மேலும் நள்ளிரவில் நடந்த சிறப்பு பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story