வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்


வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்
x

பரமக்குடி அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் , 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

கரூர் மாவட்டம் ,கொடையூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன்.இவரது மகன் கந்தசாமி ( வயது 65), டாக்டர் .இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 18 பேருடன் வேனில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் கரூர் செல்வதற்காக திரும்பி வந்தனர்.

ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42) டிரைவர். இவர் மினி வேனில் பரமக்குடிக்கு சென்று விட்டு மீண்டும் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி அருகே அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் வரும் போது வேனும், டாடா ஏ.சி.யும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் டாடா ஏ.சி. டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் வந்த கருவூர் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (70), ஜமுனா தேவி(38), கந்தசாமி (65), லட்சுமி ( 52), இந்திராணி (52), சகுந்தலா (52), சித்ரா (38), வசந்தகுமார் (24), முனியாண்டி ( 24 )ஆகிய ஒன்பது பேருக்கும் கை ,கால் ,மூக்கு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு பரமக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இறந்த டிரைவர் பால முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் ,இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story