சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைப்பு


சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைப்பு
x

சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் 15 வந்தே பாரத் ரெயில்கள் பல்வேறு நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வருகின்றது. இதில், சென்னை-மைசூரு இடையிலான 5-வது வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்டது. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், இந்த ரெயிலின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 5.50-மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு காலை 7.21-மணிக்கு பதிலாக காலை 7.13-மணிக்கு சென்றடையும். காட்பாடியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும். இதேபோல, மைசூரில் இருந்து சென்னைக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் காட்பாடியை மாலை 5.36 மணிக்கு பதிலாக, மாலை 5.33 மணிக்கு வந்தடையும்.

இந்த ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை 10 நிமிடம் முன்னதாக அதாவது 7.20 மணிக்கு வந்தடையும். இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு ஹவுரா செல்லும் மெயில் விரைவு ரெயில் (12840) இரவு 7.20 மணிக்கு புறப்படும். இந்த 2 ரெயில்களின் நேரமும் வரும் 15-ந்தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story