பரமக்குடியில் ஆர்ப்பரித்து செல்லும் வைகை ஆற்று வெள்ளம்
பரமக்குடியில் வைகை ஆற்று தண்ணீர் இருகரைகளிலும் ஆர்ப்பரித்து செல்கிறது.
பரமக்குடி,
பரமக்குடியில் வைகை ஆற்று தண்ணீர் இருகரைகளிலும் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஆர்ப்பரித்து செல்லும் வைகை ஆறு
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. பின்பு அங்கிருந்து நேற்று காலை பரமக்குடியை வந்தடைந்தது. வைகை ஆற்றின் இருகரை முழுவதும் பரவி தண்ணீர் ஆர்ப்பரித்து வேகமாக செல்கிறது. வைகை ஆற்றில் வரும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
மேலும் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் வைகை ஆற்றுக்குள் இறங்கி நண்பர்களுடன் விளையாடுகின்றனர். வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்குள் மூழ்கி சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் பலியாகி வருவது ெதாடர் கதையாக நடந்து வருகிறது.
கண்காணிக்க கோரிக்கை
ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியாக வைகை ஆற்றுக்கு குளிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஆற்றுப் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை எடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வைகை ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு வைகை ஆற்று தரைப்பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.