மேட்டுப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு


மேட்டுப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
x

மேட்டுப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளையை சேர்ந்த மேட்டுப்பட்டி வடக்கு காலனியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், மதுரை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 12 மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாடுகளில் 3 மாடுகள் வீரர்களால் பிடிக்கப்பட்டன. இதையடுத்து, பிடிபடாத மாடுகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் அமைச்சர் ரகுபதி பரிசுகளை வழங்கினார். வடமாடு மஞ்சுவிரட்டில் மாடு பாய்ந்ததில் 4 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


Next Story