வடபத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு


வடபத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
x

குடவாசல் அருகே நாலாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே நாலாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

வடபத்ரகாளியம்மன் கோவில்

குடவாசல் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் வடபத்ரகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது.

திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி குடமுழுக்கு விழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது.

குடமுழுக்கு

இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, கஜ பூஜை, கோ பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலாங்கட்டளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story