"2022-யில் கூடுதலாக 75 சதவீதம் வரை அதிக மழை?" தமிழகத்தை தாக்குமா புயல்?


2022-யில் கூடுதலாக 75 சதவீதம் வரை அதிக மழை? தமிழகத்தை தாக்குமா புயல்?
x

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 75 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 75சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசர கட்டுபாட்டு மையத்தில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சராசரி மழையை விட இந்த ஆண்டு 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. புயல் வருவதற்கான அறிவிப்பு ஏதும் இதுவரையில் வரவில்லை.

பருவமழையை எதிர்கொள்ள 2048 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Next Story