தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை-ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை-ஆர்ப்பாட்டம்
x

தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி பாய்லர் ஆலை நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பாய்லர் ஆலை நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாய்லர்ஆலை நிறுவன ஐ.என்.டி.யு.சி. உறுப்பினர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து கல்யாணகுமார் கூறுகையில், 'பாய்லர்ஆலை நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நான் பல வழக்குகளை தொடர்ந்து உள்ளேன். என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பாய்லர்ஆலை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. எனவே இந்த தொழிலாளர் விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம்' என்றார். இதேபோல் பாய்லர் ஆலை நுழைவு வாயில் முன்பு தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி, திராவிடர் கழகம், பாட்டாளி தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story