மாநகராட்சி 19-வது வார்டில் பாதாள சாக்கடை குழாய் புனரமைப்பு பணி


மாநகராட்சி 19-வது வார்டில் பாதாள சாக்கடை குழாய் புனரமைப்பு பணி
x

மாநகராட்சி 19-வது வார்டில் பாதாள சாக்கடை குழாய் புனரமைப்பு பணி: நடைபெற உள்ளது.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்குட்பட்ட, சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகள் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகும். இதில் சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்க வேண்டியுள்ளதால் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பொறியாளர்கள். தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு. சிங்காரத்தோப்பு வணிக சங்கத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் புனரமைக்கும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் மேற்கொள்ள உள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி. சிங்காரத் தோப்பு தெருவில் சூப்பர் பஜார் முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை உள்ள அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்படாது. இந்த பணிகள் முடிந்தவுடன் 9-ந்தேதி முதல் சாலை திறக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story