தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா நிறைவு


தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா நிறைவு
x

21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா தொடங்கியது. இவ்விழா பேசிய விஜய், ''தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்' என கூறினார் .

தொடர்ந்து கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இரண்டாம் கட்டமாக வரும் 3ம் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி. ராணிப்பேட்டை தஞ்சாவூர். திருவள்ளூர். திருவண்ணாமலை. திருவாரூர், திருப்பத்தூர் திருச்சி. வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார்.


Next Story