மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
x
தினத்தந்தி 7 Sep 2023 7:30 PM GMT (Updated: 7 Sep 2023 7:30 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே சின்ன கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 52). இவருடைய மனைவி சித்ரா(வயது 47). ஆசிரியை. இவர்களது மகள் சுப சீதா(12). இந்த நிலையில் ராமசாமி தனது மனைவி, மகளுடன் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். எஸ்.அய்யம்பாளையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு ராமசாமி, சுப சீதா பலத்த காயம் அடைந்தனர். சித்ரா, காயமின்றி தப்பினார். உடனே அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story