தர்மபுரி அருகே கோவில் விழாவில் பிரச்சனை - கிராம மக்கள் 7 பேர் தற்கொலை முயற்சி


தர்மபுரி அருகே கோவில் விழாவில் பிரச்சனை - கிராம மக்கள் 7 பேர் தற்கொலை முயற்சி
x

13 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததால் மனமுடைந்த 7 பேர் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வேப்பமரத்தூர் கிராமத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை தடுத்து நிறுத்த மர்ம நபர்கள் முயற்சி செய்ததால் மனமுடைந்த கிராம மக்கள் சிலர் கோவில் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷத்தை கலந்து குடித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக அவர்கள் 7 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் வேப்பமரத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷமருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே சமயத்தில் ஊர் மக்கள் 7 பேர் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story