பைக் ரைடர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..!


பைக் ரைடர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..!
x

திருச்சியில் பைக் ரைடர் அசார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி அதனை யூடியூப், பேஸ்புக், இண்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை தொடர்ந்து அசாருக்கு இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் திருச்சி வருவதை அறிவித்த அசார், குறித்த நேரத்தில் விலை உயர்ந்த பைக்குடன் சென்றுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் உடனே அசாரை காண குவிந்தனர். திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கிய பைக் பயணம் இளைஞர்களின் அலறல் சத்தத்துடன் பைக்கில் அதிவேகமாக ஊரை சுற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பைக் ரைடர் அசார் மீது திருச்சி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு, அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பைக் ரைடர் அசாருக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் சப்ஸ்கிரைபர்கள் சந்திப்பு நடத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் சென்றதால் எழுந்த சர்ச்சையால் பைக் ரைடர் அசார் மீது போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.





Next Story