குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பை


குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பை
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 6:46 PM GMT)

குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது

சிவகங்கை

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் ஊராட்சியில் மந்தை அருகே குழந்தைகள் மையம் உள்ளது. இந்த மையத்தின் அருகில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் புகைமூட்டம் ஏற்படுவதோடு சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று தகவல் பலகை வைக்கப்பட்ட பிறகும் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் அதன் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், நூலக கட்டிடம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ள நிலையில் அங்கு கொட்டப்படும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story