அம்மன் வேடமணிந்து திருநங்கைகள் ஊர்வலம்


அம்மன் வேடமணிந்து திருநங்கைகள் ஊர்வலம்
x

உலகங்காத்தான் கிராமத்தில் அம்மன் வேடமணிந்து திருநங்கைகள் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் மாரியம்மன், கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக மாரியம்மன் வெக்காளி அம்மன் தோற்றத்தில் வீதி உலா நடைபெற்றது. அப்போது கண் தெரியாத மாற்றுத்திறனாளி ராகவன் பம்பை இசை ஒலிக்க, அம்மன் வேடம் அணிந்த திருநங்கைகள் நடனமாடியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story