திருநங்கைகள் கல்வி பயில உதவி


திருநங்கைகள் கல்வி பயில உதவி
x

திருநங்கைகள் கல்வி பயில தேவையான உதவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

விருதுநகர்


திருநங்கைகள் கல்வி பயில தேவையான உதவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

கலந்துரையாடல்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் பட்டதாரி திருநங்கைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் 47 பட்டதாரி திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட நிர்வாகத்தால் கூறப்பட்டதாவது:- தனித்திறன் திருநங்கைகள் தங்களுக்கான தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த திறன்களை வைத்து தற்போதுள்ள வியாபார சூழ்நிலைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அரசு மூலம் திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளும், படிப்பதற்கும், வேலைவாய்ப்புக்கு தேவையான உதவிகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போட்டி ேதர்வு

சமூக பிரச்சினைகளை எதிர் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு இலவச போட்டி தேர்வு மையங்களில் சென்று படித்தால் எளிதில் வெற்றி பெற முடியும். தொழில் சார்ந்த திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும். அரசு போட்டி தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்தால் எளிதில் வெற்றி பெற முடியும்.அப்படி வெற்றி வரும்போது இந்த சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வாழ்வாதாரம்

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரி திருநங்கைகள் கூட்டத்தில் கலந்து கொண்டதால் புத்துணர்வும், ஊக்கமும் கிடைத்துள்ளதாகவும் தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளதாகவும், தங்களுடைய வாழ்வாதாரம் சார்ந்த சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெளிவான விடை கொடுத்ததாகவும் ,தாங்களும் சாதித்து காட்டுவோம் என தெரிவித்தனர்.

மேலும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்


Related Tags :
Next Story