அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டு பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்ணாபாடி மற்றும் வரகுபாடி கிராமங்களில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்தும், அங்ககப் பண்ணையம் அமைக்கும் முறைகள் குறித்தும், அங்ககப் பண்ணையம் அமைத்து அங்கக பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கு தேவையான பி.ஜி.எஸ். தரச்சான்று எனும் பங்கேற்பு உறுதி தரச் சான்றிதழ் பெறுவது குறித்தும் ஆலத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாபு தலைமை தாங்கி, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஆலத்தூர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் சரண்யா பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களையும், தோட்டக்கலை திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப கருத்துக்கள் மற்றும் அங்கக பண்ணையம் சான்று பெறுதல் குறித்து திருச்சி அங்கக சான்றளிப்பு துறை வேளாண்மை அலுவலர் சபாபதி விளக்கி கூறினார்.

மேலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக மத்திய திட்ட வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் வேல்முருகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை திட்டங்கள் குறித்தும் அங்கக இடுபொருள் தயாரிப்பது குறித்தும் விளக்கி கூறினார்கள். ஆலத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் சவுமியா மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். ஆலத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் பயிற்சிக்கான ஏற்பாட்டினை செய்து பயிற்சியின் முடிவில் நன்றி கூறினார்.


Next Story