விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை வேளாண் பயிற்சி


விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை வேளாண் பயிற்சி
x

விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது.

கரூர்

க.பரமத்தி வட்டாரத்தில் உள்ள வேட்டையார்பாளையத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை வேளாண் பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கி பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், நோய் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி குறித்து விளக்கி பேசினார்.

அங்ககச் சான்று வேளாண் உதவி இயக்குனர் மணிமேகலை உறுதி செய்யப்பட்ட பங்களிப்பு திட்டத்தின் கீழ் இணையதளத்தில் பதிவு, மூன்றாண்டு நிலம் பராமரிப்பு செய்யும் பட்சத்தில் அங்ககச்சான்று வழங்கப்படும். இந்தச் சான்றிணை வைத்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து கொள்ளலாம், என்றார். தொடர்ந்து பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் க.பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வன், இயற்கை விவசாயி மனோகரன், துணை வேளாண் அலுவலர் ஜான் பீட்டர், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story